(Date Published: Nov 03' 09) I started to write this way back in sep. But did not complete it. Here is a complete version. The incident I've mentioned in the last few paras hold good for the published date Nov 03' 09 and not for the date Sep 23 as in the blogger.. )
அன்று எனக்கு கண்ணில் நீர் வழிந்தபடியே அந்த நடனத்தை படம் பிடித்து கொண்டிருந்தேன். என்னை அறியாமல் ஒரு சந்தோசத்தை அவள் எனக்குள் கொண்டு வந்தாள். அவளின் அந்த நடனம் என்னை வியக்க வைத்து. அன்று எனக்குள் ஆயிரம் கேள்விகளை கொடுத்து விட்டு போனாள். அதில் ஒரு சில இதோ...
- "என்னால் முடிந்தால் ஏன் உன்னால் முடியாது?"
- "உனக்கு என்ன குறைச்சல்?"
- "இந்த உலகில் என்ன நீ சாதித்தாய்?"
- "உன்னால் இந்த உலகிற்கு என்ன பிரயோஜநம்?"
இன்னும் நிறை கேள்விகளை என்னுள் எழுப்பிவிட்டு மறைந்தாள் . இதெல்லாம் ஏன் என்றால் , அந்த பெண்ணிற்கு இரண்டு கால்களும் சரியாக இல்லை. இருத்தாலும், தனது தன்னம்பிக்கையால் அவள் அந்த சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே தனது பாவத்தால் சொல்ல நினைத்ததை அழகாக சொல்லி சென்றாள். அதில் நான் கற்ற பாடம என்னவென்றால் எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையை ஒருவன் இழக்க குடாது. ஒன்று கை கூடவில்லை என்றால் மற்றொரு கதவை நாம் தட்டி பார்த்து அதில் இருகிறவற்றை நாம் எடுத்துகொள்வோம் என்பதே.
இது ஒருபுறம் இருக்க நான் இப்போது வசித்து வரும் நாட்டில் உடல் ஊனமுற்ற மக்களுக்கு தனி வசதிகள் இருக்கின்றன. அதனால் அந்த பெண் இவ்வளவு தூரம் செய்ய முடிகிறது. ஆனால் நம் நாட்டில், அவர்களுக்கு செய்யும் உதவிகள் அவர்களுக்கு சரியாகப்போய் சேர்வதில்லை. அதோடு மட்டும் இல்லாமல் தானே விரும்பி வந்து உதவும் மக்கள் தொகை மிக குறைவு நம் நாட்டில். இதனால்உடலில் சிறு குறை உள்ள மக்களால் இன்னும் சாதிக்க முடியவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்று என் அம்மா பார்வை அற்ற குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் வசதி பற்றி கூறினார். கடந்த வாரம், சென்னையில் உள்ள மிக பிரபலமான பள்ளியில் கண் பார்வையற்ற மக்களுக்கு பாடம் கற்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாம். அதில் கிட்ட தட்ட 120 பேர் பங்கு பெற்றனராம். ஆனால் 60 பேருக்கு பாடம் கற்பிக்க ஆள் இல்லையாம். பாவம். அவர்களும் ஜெய்க்க வேண்டும் என ஆசை படுகிறார்கள். நாமோ அவர்கைளை பார்த்து பரிதபா படுகிறதோடு நிருத்திகொள்கிறோம் .
நம் நாட்டில் அயிர கணக்கான மக்கள் உடலில் ஏதோ குறையுடன் பிறக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடித்ததை செய்தால் அவர்களும் பயன் பெறுவர், நமக்கும் மன திருப்தி இருக்கும். நான் கூறிய நிகழ்ச்சி இந்த வாரமும் நடக்கிறதாம். நம்மால் முடிந்த உதவியை செய்வோம். இதை படிப்பவர்கள் உங்கள்ளுக்கு தெரிந்தவர்களிடம் இதை பற்றி கூறி உங்களால் முடிந்ததை செய்யுங்கள். என்னால் அந்த இடத்துக்கு போக முடியாததால், என்னால் முடிந்ததை செய்கிறேன்.
சிறு துளி பெருவெள்ளம். ஒன்று சேர்த்து முடித்தவரை உதவுவோம். பிறந்த பயனை நிறைவேற்றுவோம் .
பி கு: அந்த பள்ளி பெயர் எனக்கு சரியாக தெரிய வில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு இந்த கமெண்ட்ஸ் காலமில் எழுதுங்கள். நான் கேட்டு உங்கள்ளுக்கு அந்த விலாசத்தை சொல்கிறேன்